நம் முன்னோர்கள் முருங்கையை ஏன் பத்துக்காதர்கள் தெரியுமா ?? வாங்க பார்க்கலாம்.
முருங்கைக்கு பல வகை உண்டு. காட்டு முருங்கை,கொடி முருங்கை,தவசு முருங்கை.
வீடு கட்டும் முன்பு முருங்கை கொம்பை நட்டு வைப்பார்கள்.அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன் கொடுக்கும்.அதேபோல விடும் வளர்ந்ததுவர வேண்டும் என்பது நம்பிக்கை.
மருத்துவ குணம் கொண்டவை முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் ஆகியவை.தினமும் உணவில் கீரை, காய், பூ சேர்த்தால் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.உடலுக்கு புத்துணர்வு தரும்.
அவசர உலகில் பொருளாதார போராட்டத்தில் திருமணமானவர்கள் தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் இருக்கின்றனர்.இவர்கள் முருங்கை பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் அருந்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.இது நினைவாற்றலை அதிகரிக்கும். இதை கஷாயம் செய்து சாப்பிட்டால் மாத விளக்கு காலங்களில் உள்ள தொல்லை நீங்கும்.
விஞ்ஞான உலகில் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கிறோம்.வெள்ளெலுத்து, வென்படலம் மாற, நீரிழிவு நோயின் பாதிப்பு குறைய முருங்கை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இது பித்தத்தை குறைக்கும்.இதை கஷாயம் செய்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.