முன்னோர்களின் முறைகள் !!!!
1) பூக்களை கட்டும் போது இடைவெளி இருக்க கூடாது.
2) கணவன் மனைவி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சண்டை போட்டால் பணக் குறைவு ஏற்படும்.
3) எழுந்தவுடன் முதலில் பார்க்க வேண்டியது கோவில் கோபுரம், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, உள்ளங்கை, சந்தனம், மனைவி, குழந்தைகள்.
4) பூஜை அறையில் உடைந்த பொருட்களை போட கூடாது.
5) பூஜை செய்யும் போது பெண்கள் நெற்றியில் குங்குமம் இட வேண்டும்.
6) கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைதல் கூடாது.
7) குங்குமம், மஞ்சள் இவற்றை வீட்டின் நிலைகளில் வைக்க வேண்டும்.
8) ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ, உதுபதியையோ ஏற்றக்கூடாது.
9) தெய்வ படங்களுடன், மறைந்த மூதாதையர் படத்தை வைக்க கூடாது.
10) வீட்டில் யாரது தூங்கி கொண்டிருந்தாள் அவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்க கூடாது.விளக்கேற்ற கூடாது.
11) தீட்சை பெட்ரவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூச வேண்டும்.
12) புழுக்கள் அரசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்ய கூடாது.
13) தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் போது வெற்றிலை மற்றும் பங்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
14) உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவற்றை செய்யக் கூடாது.
15) வீட்டில் அரளி பூச்செடி வளர்த்து தரிசித்தால் தீவினைகள் மறையும்.
16) வெற்றிலை காம்பில் மூதேவி வாசம் செய்வதால் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையை கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
17) நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்ய கூடாது.
18) தனது வீட்டில் கோலம் போடாமல், விளக்கேற்றாமல் ஆலயங்களுக்கு செல்ல கூடாது.