திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்…! எனவே திருமணத்தை முறையாக, சரியான வயதில் செய்ய வேண்டும்
ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் கருவுறும் திறன் இருக்கும்.வயதாக வயதாக பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் கருவுறும் திறன் குறையும்
40 வயதுக்கு மேல் திருமணமாகும் ஆண்களுக்கு தாமதமாக தான் குழந்தை பிறக்கும்
25 வயதில் இருக்கும் ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் கருவுறும் திறன் பெறுகின்றனர்
ஆண்களுக்கு 30 வயதிற்கு மேல் விந்துக்களின் உற்பத்தி திறன் ஒவ்வொரு ஆண்டும் 1% குறைகிறது
விந்துக்களின் இயக்கமும், தரமும் 25 வயது வரை மிகச்சிறப்பாக இருக்கும்.இது வயதை மட்டும் குறிக்காமல், இதோடு இணைந்த வாழ்க்கை முறையையும் குறிக்கின்றது.
புகைபிடித்தல், ஊட்டசத்திண்மை, இறுக்கமான உடைகளை அணிவது, தூக்கமின்மை என இவையும் அடங்கும்.
22 முதல் 25 வயது வரை தான் திருமணம் ஆவதற்கான சரியான வயது.ஆனால் இந்த வயதில் அவர்கள் செட்டிலாகி இருக்கமாட்டார்கள்.எனவே 28 முதல் 30 வயது சரியானது.
இதை தாண்டினால் பல விதத்தில் குறைபாடுகளும், இதனால் குழப்பங்களும் ஏற்படும்.