இந்த கடிதம், ஒரு பெண்ணின் மன வேதனை.
அன்புள்ள புருஷா….
இது வெறும் கடிதமல்ல.என்னை போன்ற பெண்களின் ஏக்கம்.அனைத்து குறைகளையும் ஏக்கத்தையும் எழுதுகிறேன்.
அதிகாலையில் இழுத்து அணைத்து உன் தோல் மீது தூங்க இடம் தருவாய்.ஆனால் அது இப்போது நடப்பதில்லை.ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது உண்மைதானோ என்று தோன்றுகிறது.
ஏக்கமாய் என் பெயரை உச்சரிப்பாய், உன் உதடுகளால்.
அலுவலகம் புறப்படுகையில் ஒரு முத்தம் கேட்பாய்.
அலுவலகம் சென்றதும் தகவல் கொடுப்பாய்.
ஆனால் இப்போது….
எதையாவது மறந்தால் மட்டும் தொலைபேசியில் அழைக்கிறாய்.
அதற்கு மேல் நீயும் பேசுவதில்லை.நான் கேட்பதற்கு ஒன்றும் இல்லை.
எனக்கு பாடல் பாட தெரியும்.நீ பாட சொல்வதில்லை.
நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாய். பாராட்ட வில்லை.
நான் போடும் கோலத்தை தாண்டி தான் போகிறாய்.அதை ரசிக்கவில்லை.
👫 மனதுக்கு பிடித்தவர்களின் பாராட்டுகளை விட பெரிய சன்மானம் எதுவும் இல்லை. ஆனால் நீ இந்த சன்மானத்தை கூட தரவில்லை.
இப்போது உன் முத்தங்கள் எனக்கு பிடிக்கவில்லை.
பகலில் சிகரெட் நாற்றம்.இரவில் விஸ்கி நாற்றம்.ஏன் இந்த பழக்கம் என்று கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
இவ்வளவு பிரக்கணிப்புக்கும் நீ கொடுக்கும் ஒரே பதில் :
எனக்கு ஆயிரம் வேலைகள்.ஏகப்பட்ட பிரச்சனைகள் !!
ஆனால் எனக்கு நீ மட்டும் தான்.உன்னைவிட வேறு யார் எனக்கு ஆறுதல் தருவது.