உலகில் சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்து விடும்.
இவர்கள் தான் உண்மையிலேயே வரம் பெற்றவர்கள்.
இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நிலை மாறி தூங்காமல் இருந்தால் சோர்வு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை பிரச்சனைக்கு டாக்டர்.ஆன்ட்ரூ வீல் ஒரு தீர்வை முன்வைக்கிறார்.மூச்சில் கவனம் வைத்தால் மன அழுத்தம் கட்டுக்குள் வரும். இதனால் மூளையானது செயல்பாடுகளை நிறுத்தி விட்டு அமைதியான நிலைக்கு வரும்.
மூக்கின் வழியே சுவாசத்தை 4 நிமிடங்கள் உள் வாங்கி 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி, அதன் பின் வாய் வழியாக 8 நொடிகள் வெளிவிட வேண்டும்.இப்படி செயதால் மூளை புத்துணர்ச்சி பெற்று, தூக்கமும் நன்றாக வரும்.இது இதயத்துக்கு நல்லது.இரத்த அழுத்தம் குறைந்து மன அமைதி ஏற்படும்.
தொடக்கத்தில் பயன் இல்லாதது போல தோன்றும்.இது ஒரு பயிற்சியாக மாறிய பிறகு, தூக்கம் கண்களை சுழற்றும்.