மீன்கள் சாப்பிட்டால் எலும்பு, மற்றும் மூளை வளர்ச்சியை பதிக்குமாம்.என்ன வியப்பாக இருக்கிறதா….!
எல்லா மீன்களையும் குறிப்பிடவில்லை.நாம் இப்போது பார்க்க போகும் மீன் தான்.
அதுவும் தமிழ்நாடில் தான்…!
எண்ணுர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள், குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது.இந்த குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது.இதனால் வெளியேற்றப்படும் கழீவுகள், கொசஸ்தலை ஆற்றில் கலப்பதாக ரவிக்குமார் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அவர்கள் கொடுத்த அறிக்கையில், இந்த மீன்களில் காட்சிமம் மற்றும் லெட் போன்ற கன உலோகங்களின் அளவு, அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளது எனவும், இந்த மீன்கள் உண்பவர்களுக்கு எலும்பு மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கும் எனவும், இறால், முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட லெட் கன உலோகம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் நண்டில் 4.85 மி.கி லெட், 1.37 மி.கி காட்மியம் உள்ளதாக தெரிவித்துள்ளது.