பெண்களே…! நீங்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் ஆண்களும் இருக்கிறார்களா ???
ஆம் என்றால், அப்படிப்பட்ட சூழலில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.
பழக்கத்தின் எல்லை எது வரை என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
அலுவலகம் என்பது ஒரு வகை பூங்கா. இதில் குடும்ப பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள கூடாது.
உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் தனிப்பட்ட விஷயங்களையும், பொருளாதார இயலாமை பற்றியும் பகிர்ந்து கொள்ள கூடாது.
ஆண்கள் பெண்களை கவருவதற்காக, அக்கறை காட்டுவது போலவும், அன்பு காட்டுவது போலவும் பேசுவார்கள்.இந்த சூழலில் பெண்களுக்கு அதிக கவனம் தேவை.
தன்னிடம் அன்பாக பேசுபவர்கள் எல்லாரும் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்வார்கள் என நினைகக்கூடாது.
ஆண்கள் எந்த நோக்கத்தோடு பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதை அவருடைய வார்த்தைகளில் இருந்தும், கண்களில் இருந்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் அந்த நபர்களின் உறவை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
உங்களின் இறக்க குணத்தை அவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அவர்களின் மனைவி பற்றி குறை கூறுவார்கள்.இதற்கு நீங்கள் இடம் கொடுத்தால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரும்.
நீங்கள் உடுத்தும் உடைகளில் கவனம் தேவை. பிறருடைய கண்களை கவரும் வகையில் அது இருக்க கூடாது.
உடல் ரீதியான ஈர்ப்பினை நீங்கள் ஏற்படுத்தினால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் விபரீதமாக தான் இருக்கும்.