வெற்றிலை-பாக்கு போடுவதால் அனைத்து நோய்களும் நீங்கும்.என்ன நண்பர்களே.வியப்பாக இருக்கிறதா….
வாங்க தெரிந்து கொள்வோம்.
முடி வெட்டுவத்தில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை அனைத்து சடங்குகளிலும் வெற்றிலை உலா வருகிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்போது அதில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். மதிய உணவிற்கு பிறகு போடும் போது சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்து கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது.
இது இதயத்தை வலுப்படுத்தி, உடலையும், முலையையும் சுறுசுறுபடைய செய்கிறது.
உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் இவை அனைத்தும் சரியான நிலையில் இல்லாவிட்டால் நோய்களின் தாக்கம் இருக்கும்.பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை குறைக்கும்.சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கும். வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கும்.
ஓரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்படும்.
கிருமிகளின் தாக்கத்தை குறைத்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும்.