வாழ்க்கையின் உண்மையை உணர்வோம் வாருங்கள் :
ஒருவனுக்கு நான்கு மனைவி இருந்தார்கள்.ஆனால் நான்கு பேரையும் அவன் சமமாக பார்க்கவில்லை.
அவன் தனது நான்காவது மனைவியை மட்டுமே அதிகமாக நேசித்தான். அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்தான். அவள் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றினான்.
அவன் தனது மூன்றாவது மனைவியையும் நேசித்தான்.ஆனால் அவளை நண்பர்களிடமோ, பிறரிடமோ காட்டவில்லை. ஏன் என்றால் அவள் பிறரோடு ஓடி விடுவாளே என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.ஆனால் அவனுக்கு எப்போது பிரச்சனைகள் வருதோ, அப்போது மட்டும் அவளிடம் போவான்.அவளும் அதை தீர்த்து வைத்து உதவி செய்வால்.
ஆனால் அவன் முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவள் அவன் மீது அதிக அன்பும் பாசமும் வைத்திருந்தாள். அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்தாள்.
ஒரு நாள்……
ஒரு நாள்… அவன் மரணப்படுக்கையில் விழுந்தான்.தான் இறக்கப்போவதை உணர்ந்தான்.ஆனால் அவனுக்கு ஒரு ஆசை.தான் இறந்த பின் தன்னுடன் ஒரு மனைவி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
எனவே யார் தன்னுடன் வர தயாராக இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்பினான்.அவர்களிடம் கேட்டான்.
என்ன பதில் ??
வாருங்கள்.அவர்களின் பதிலை பார்ப்போம்.
- அதிகமாக நேசித்த நான்காவது மனைவி – அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்
- மூன்றாவது மனைவி – நீயோ சாகப்போகிறாய்.நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்
- இரண்டாவது மனைவி – உன் கல்லறை வரைக்கும் தான் வர முடியும். கடைசி வரை வர முடியாது
அவன் நொந்து போனான்….
அப்போது ஒரு குரல் கேட்டது. அது அவனது முதல் மனைவியின் குரல்
நீ எங்கே போனாலும் நான் உன்னுடன் இருப்பேன்.உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ” என்று சொன்னாள்.
ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தால்.காரணம் அவன் அவளை கவனிக்கவில்லை.
இப்போது வருந்தி கூறினான்.நான் நன்றாக இருக்கும் போதே உன்னை கவனித்திருக்க வேண்டும் என்று கூறி அழுதான்.வருந்திய அவன் இறந்து போனான்.
உண்மையிலேயே அனைவருக்கும் 4 மனைவிகள் உண்டு.
நான்காவது மனைவி உடம்பு – என்ன தான் நன்றாக கவனித்தாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை
மூன்றாவது மனைவி சொத்து – நாம் மறைந்ததும் அது வேறு யாருடனோ சென்று விடும்
இரண்டாவது மனைவி குடும்பம் – கல்லறை வரை மட்டும் தான் வருவார்கள்.
முதல் மனைவி ஆன்மா – நாம் நன்றாக கவனிக்காவிட்டாலும், சாகும் தருவாயில் இருந்தாலும், நம்முடன் இறுதிவரை வருவது நமது ஆன்மாதான்.