காய்கறிகள் இயற்கையான முறையில் இருந்து வந்தது என்று அறிவது எப்படி ?
வாங்க பார்க்கலாம்.
‘ஆர்கானிக்’ என்றால் ‘இயற்கையானது’ என்று பொருள்.சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக்.இது இறைச்சி,பால், முட்டை போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது.
காய்கறிகள் எங்கு இருந்து உற்பத்தி ஆகிறது என்று தெரிந்து கொண்டு வாங்குங்கள். அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய்,பழங்களை வாங்குவது நல்லது.
முகர்ந்து பார்த்து ; புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இவற்றை அறியலாம்.காய்,கனிகள் அதற்கென உரிய வாசனையோடு வருகிறதா என பரிசோதித்து பாருங்கள்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.கருப்பட்டி கருப்பாக இருக்க வேண்டும்.ஆனால் பளபளப்பு இருக்க கூடாது.எளிதில் உடைய கூடாது.
ஒரு வாரம் வரை தக்காளி அழுகாமல் தோல் சுருங்கினால்,அது ஆர்கானிக்.வெண்டைக்காய் கோணலாக,சுருக்கமாக இருந்தால் முகர்ந்து பார்த்து வாங்குவது நல்லது.
அரிசியை கைவிட்டு அள்ளும்போது மாவுபோல் கைகளில் பட்டால் அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல.அரிசி தீட்டப்படும்போது அதில் எண்ணெய் சேர்ப்பதால் மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும்.
வண்டுகள் விழுந்த அரிசி, பருப்பு வகைகளை வாங்குவது தப்பிள்ளை. அதை சுத்தப்படுத்தி வைத்து கொள்ளலாம்.பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதாணியங்களை தேர்ந்தெடுங்கள்.