அல்சர் நோய்க்கு விடிவு காலம் வந்துவிட்டது :
முதலில் அலசருக்கான காரணத்தை அறிவோம்.
கிருமிகளின் தாக்குதலாலும், காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், மசாலா நிறைந்த உணவுகள், மதுபானம், புகையிலை, மனக்கவலை, பரபரப்பினாலும் வயிற்றில் புண்கள் ஏற்படுகிறது.
இதன் அறிகுறிகள்.
வயிற்றின் மேல் பகுதியில் வலி, குமட்டல், உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் பசி எடுத்தல், நோயின் தாக்கம் அதிகமாகும் போது இரத்தம் கலந்த அல்லது கருப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, இரத்த வாந்தி, சோர்வு உடல் எடை குறைதல் இவைகள் தான்.
எளிய தீர்வுகள்.
சுக்குத்தூளை கரும்புச்சாற்றில் கலந்து குடித்தல்
சீரகம், அதிமதுரம்,தென்னம்,சர்க்கரை இவற்றை சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து பின் பாலில் கலந்து குடித்தல்
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து பருகுதல்
மனத்தக்காளிக் கீரையை பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து உண்ணுதல்
மற்றும் ; கோஸ், கேரட், வெண்பூசனி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம், தயிர், மோர், இவற்றை சேர்த்தல்
முக்கியக் குறிப்புகள் :
காலை உணவை தவிர்க்க கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்
தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.